ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2019

முருங்கன் விபத்தில் இரு இளைஞர்கள் பலி

மன்னார் - முருங்கன் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அளவக்கையில் இருந்து முருங்கன் நோக்கி சென்றபோது வேக கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்தில் பலியாகினர்.

இதன்போது அளவக்கை, புதுக்குடியிருப்பை சேர்ந்த இராசதுரை பிரசாந்த் (வயது 24) , கணேஸ் தயாளன்(வயது19) ஆகிய இரண்டு இளைஞர்களே விபத்தில் பலியாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் உடல் கூறு பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது