புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 ஆக., 2019

தமிழ்தேசியகூட்டமைப்பை உடைக்க சிங்கள பேரினவாதி குள்ளநரி ரணிலின் முயற்சி வெற்றி

தமிழரசுகட்சிக்காறர்கள் அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை பெறப்போவதாக பகிரங்கமாகவே கூறிவருகிறார்கள்.தமிழ்தேசியகூட்டமைப்பை உடைக்க சிங்கள பேரினவாதி குள்ள நரி ரணிலின் முயற்சி இதனூடாக வெற்றியளிக்கிறது. எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டுதான் எமது அரசியலை முன்னெடுக்கலாம்.

அமைச்சு பதவி ஏற்கும்படி மக்கள் எமக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம்.
கடந்த 16ம் திகதி வந்தாறுமூலை விஷ்ணு ஆலயத்தில் கம்பெரலிய நிதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளை பார்வையிட சென்றபோதே, இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் நிதியொதுக்கீட்டில் இந்த பணி நடந்து வருகிறது. அபிவிருத்தி பணிகளை பார்வையிட துரைராசசிங்கம், சிறிநேசன் இருவரும் சென்றிருந்தார்கள்.

அப்பொழுது ஆலய நிர்வாகம், அந்த பகுதியிலுள்ளவர்களுடன் சிறு கலந்துரையாடல் ஒன்றை இருவரும் மேற்கொண்டனர். இதன்போதே, கி.துரைராசசிங்கம் மேற்படி கருத்தை தெரிவித்தார்.

அரசியல் காலசூழல் மாற்றத்திற்கு ஏற்ப நாமும் சில மாற்றங்களை செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்பதன் மூலமே அரசியலை முன்னகர்த்தலாம்.

அபிவிருத்தி, உரிமை இரண்டையும் சமச்சீராக முன்னகர்த்த அது அவசியம். அமைச்சு பதவிகளை ஏற்கும்படி, மக்களிடமிருந்தும், பொது அமைப்புக்களிடமிருந்தும் எமக்கு பல முனைகளிலிருந்து அழுத்தம் வந்து கொண்டிருக்கிறது என்றார்.

சில மாதங்களின் முன்னர் தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின்போது, அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்க வேண்டுமென கி.துரைராசசிங்கம் யோசனையொன்றை முன்மொழிந்திருந்தார்.

இதற்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்தபோது, எம்.ஏ.சுமந்திரன் தலையிட்டு நிலைமையை சுமுகமாக்கியிருந்தார்.

விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசியகூட்டமைப்பு கம்பறலிய மாயையில் மூழ்கி கொள்கையை கைவிட்டு தற்போது ரணிலின் வலையில் சிக்கிய நிலையில்.....

பாராளுமன்ற உறுப்பினர் சிறீநேசனும் இதேகருத்தில் உள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் அமைச்சுபதவிதான் எமக்கு பலவிடயங்களை விஞ்ஞான ரீதியாக தீர்த்து வைக்கமுடியும் எனவும் இளைஞர் மத்தியில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்