புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 ஆக., 2019

சஜித்தை பிரதமராக்கும் முயற்சி தோல்வி

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசாவை பிரதமராக நியமிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கி புதிய அமைச்சரவையை உருவாக்குவதற்கான முயற்சிகளை கடந்த வாரம் சிறிசேன மேற்கொண்டிருந்தார்.

சஜித் பிரேமதாசாவை பிரதமராக்க வேண்டும் என 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கினால் தான் அவரை பிரதமராக்க தயார் என சஜித்தின் நெருங்கிய சகாவான அமைச்சரிடம் சிறிசேன தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சஜித் ஆதரவாளர்கள் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக இந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

இதேவேளை சஜித் பிரேமதாசவும் இதனை விரும்பவில்லை என அவரின் நெருங்கிய ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். துரோகி முத்திரை தன் மீது குத்தப்படலாம் ஐக்கியதேசிய கட்சி ஆதரவாளர்கள் தன்னை விட்டு விலகிச் செல்லக்கூடும் என சஜித் தெரிவித்தார் என கூறப்படுகிறது