சிறப்பாக கொரோனாவை கட்டுப்படுத்திய சுவிஸ் பாரிய தளர்வை நாளை கொண்டுவருகிறது
11.05.2020 நாளை திங்கள் சுவிஸில் இரண்டாம் கட்ட தளர்வு முன்னெடுக்கப்படுகிறது . பெரும்பாலும் அனைத்து உணவகங்கள் திறக்கப்படும் ஆனால் கொரோன அவசரகால விதி முறைகளின் கீழ் சிரமத்தின் மத்தியிலேயே இயங்கவேண்டும் என்ற நிபந்தனை உண்டு முக்கியமாக விருந்தினர்கள் ஒவொருவரும் பெயர் முகவரி தொலைபேசி இலக்கம் பதிவு செய்தெ நுழைய வேண்டும் ஒரு மேசையில் நான்கு பேர் மட்டும் இருக்கலாம் அவர்கள் ஒரு குழுவானவர்களாக இருக்கவேண்டும் வேற்று நபர் ஒன்றாக அமரக்கூடாது . சமூக இடைவெளி , கைகழுவல் தும்மல் இருமல் மறைப்புடன் போன்ற நிபந்தனைகள் இருக்கும் . இருவர் அருகில் வர நெடிய சந்தர்ப்பம் கிடைத்தால் முகக்கவசம் அணிதல் உசிதமானது விருந்தினர் எண்ணிக்கை வளமையிற் விட மிக மிக குறைவாகவே அமையும் சுமார் நான்கில் ஒரு பங்கு இருக்கலாம்