புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2020

இது எப்பிடி இருக்கு
சுமந்திரன் தனிக்கட்சி:குருபரன் ஆலோசகர்
சுமந்திரன் ஆயுதப் போராட்டத்தை ஏற்காதவர், தமிழ் தேசியவாத அரசியலை ஏற்காதவர் என்பது அறிந்த விடயமே. அவர் நேர்மையின்
பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கைவிட்டு ஒன்றில் தமிழ் பேசும் லிபெரல் சனநாயக கட்சியாக தமிழரசுக் கட்சி அல்லது கூட்டமைப்பை மாற்ற வேண்டும். வெளிப்படையாக அறிவித்து இதனை செய்ய வேண்டும். ஆதரவு தருவதற்கு வாக்காளர்கள் நிச்சயம் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார் சட்டத்தரணி கு.குருபரன்.



அல்லது மாற்றாக அப்படியான கருத்தியலை முன்னிறுத்தும் கட்சியை உருவாக்கி கொள்ள வேண்டும்.லிபெரல் அரசியலாயினும் சில தமிழ் பேசும் இடதுசாரிகளும் சேரோடு அணி சேர தயாராக இருக்க கூடும்.

இந்த மாற்று தெரிவுகள் ஊடாக தமிழ் மக்களிற்கான தீர்வு, விவகாரங்கள் தொடர்பில் செயற்படுவதற்கு ஒரு தடையும் இல்லை. மேற்சொன்ன தெரிவுகளில் ஒன்று எம்.ஏ.சுமந்திரன்; மீது வைக்கப்படும் நேர்மையின்மை குற்றச்சாட்டுக்கு தீர்வாகும்.

தேர்தல் காலங்களில் ஒன்று சொல்லியும் வேறு நேரங்களில் வேறு கதை பேசியும் அரசியல் செய்யும் அசௌகரியத்தை அது அவருக்கு இல்லாமல் செய்யும். அவரும் இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக தான் நினைச்சதை சொல்லலாம். அவ்வாறாக அரசியல் செய்ய முன்வந்தால் அந்த நேர்மையை இரசிக்க அனைவரும் தயார்.



சிறீPலங்காவின் அரசியலில் அவரால் செய்யத்தக்க, செய்து வரும் பெறுமதியான பங்களிப்பு ஒன்று உள்ளது.18 ஆம் திருத்தத்திற்கு எதிராக முதன்மையாக களமாடியது, தற்போது பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என முதன்மையாக களமாடுவது நல்ல உதாரணங்கள். இவை பெறுமதியான பங்களிப்புக்களாயினும் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்தான அரசியல் பங்களிப்புகள் இல்லை இவை.

தமிழ் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் செயற்படுவதாக வெளிப்படையாக முன்னிறுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு சிறீலங்கன் தாராண்மைவாத சனநாயக அரசியலை மேற்கொள்வது நேர்மையானதல்ல. தமிழ் தேசிய நிலைப்பாடுகளுக்கு பங்கமில்லாமல் சிறீலங்கன் தாராண்மைவாத சனநாயக அரசியலை செய்வது கடினம். செய்யலாம். ஆனால் மிகுந்த கவனம் தேவை எனவும் கு.குருபரன் கருத்து தெரிவித்துள்ளார்.

ad

ad