புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2020

www.pungudutivuswiss.comகட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்ட சில நாட்களில் மீண்டும் உயர்ந்த கொரோனா தொற்று: ஜேர்மனி எடுத்துள்ள முடிவு



ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய சில நாட்களுக்குள் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்ததையடுத்து, ஜேர்மன் உள்ளூர் அதிகாரிகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஜேர்மனியில் 16 பெடரல் மாகாணங்கள் உள்ளன, அவைகளுக்கு கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் அதிகாரம் உள்ளது.

அவை அனைத்துமே, ஏழு நாட்களுக்குள் 100,000 பேரில் 50 பேருக்கு மேல் நொய்த்தொற்று ஏற்பட்டால் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அமுல்படுத்த சம்மதித்திருந்தன.

இதற்கிடையில், ஜேர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான North Rhine-Westphaliaவில், இறைச்சி வெட்டும் தொழிற்சாலை ஒன்றின் 1,200 பணியாளர்களில் 150 பேருக்கு திடீரென கொரோனா தொற்று உருவாகியுள்ளது.

ஆகவே, மே மாதம் 11ஆம் திகதி திறக்கப்படுவதாக இருந்த உணவகங்கள், சுற்றுலாத்தலங்கள், உடற்பயிற்சி மையங்கள் மற்றும் பெரிய கடைகள் ஆகியவற்றை திறப்பதை உள்ளூர் அரசு ஒத்திவைத்துள்ளது.


ஆனால், பள்ளிகள் மற்றும் குழந்தைகளை பகல் நேரங்களில் கவனித்துக்கொள்ளும் டே கேர் மையங்கள், திட்டமிட்டபடி திறக்கப்பட உள்ளன.

குறிப்பிட்ட இறைச்சி வெட்டும் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மாகாணத்திலுள்ள அனைத்து இறைச்சி வெட்டும் தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கும், கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

எனவே, ஜேர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த ஏஞ்சலா மெர்க்கல் மேற்கொண்ட முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கொள்ளைநோயின் முதல் கட்டத்தை நாடு தோற்கடித்துவிட்டது, ஏனென்றால், நோய்த்தொற்று வீதம் குறைவாகத் தொடங்கியுள்ளதோடு இறப்பு வீதமும் குறைந்துள்ளது என்று கூறியிருந்தார் அவர்.

ஜேர்மனியில் 169,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதோடு 7,392 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad