10 மே, 2020

www.pungudutivuswiss.comபிரித்தானியாவில் இலங்கை தமிழர் மீது கொலை வழக்கு பதிவு!


பிரித்தானியாவில் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்ற இலங்கை தமிழர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் லண்டனின் இல்ஃபோர்ட் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி ஞாயிறன்று 40 வயதான நிதின் குமார் குடும்ப பிரச்சனை காரணமாக 19 மாதமேயான பவின்யா மற்றும் 3 வயதான நிகாஷ் ஆகிய இரு பிள்ளைகளையும் கழுத்தில் காயப்படுத்தி கொன்றதுடன், தற்கொலைக்கு முயன்றார்.


இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் மீது இன்று கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது