புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2023

ஐரோப்பாவுக்குள் இலங்கையர்கள் நுழையும் புதிய வழி!

www.pungudutivuswiss.com


ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய வழிமுறையை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய வழிமுறையை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்

பல ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்களும், அதிகாரிகளும் இலங்கையில் அல்லாமல், இந்தியாவில் தங்கி இலங்கை தொடர்பான பணிகளை மேற்கொள்கின்றனர். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவுக்குச் செல்லும் இலங்கையர்கள், தரகர்கள் ஊடாக தவறான தகவல்களைப் பதிவு செய்து, விசா தயாரித்து மோசடி செய்துள்ளனர். பின்னர், இதனூடாக ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்லுதல் இந்த புதிய முறை என்று தெரியவந்துள்ளது.

அதன்படி, இவ்வாறான போலியான மோல்டா இராச்சிய வீசாவுடன் இந்தியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கை இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து சம்பவம் தொடர்பில் அனைத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அந்த இளைஞனின் சகோதரியும் போலி விசாவைப் பெறுவதற்காக இந்தியாவின் புதுடெல்லிக்கு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ad

ad