புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2023

ஒரே ஒரு போட்டிதான்! சென்னை அணி செய்த 6 சிறப்பான சம்பவங்கள்!

www.pungudutivuswiss.com
கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று விளையாடிய சென்னை அணி சில மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளது.
’ஆனைக்கும் அடிசறுக்கும்’ என்பதுபோல ஐபிஎல்லில் அசால்ட்டாக 4 கோப்பைகளை வென்று பெருமை சேர்த்த சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் குஜராத்திடம் தோல்வி கண்டது. என்றாலும், ’எறும்பு கடித்ததற்காகவெல்லாம் சாக முடியுமா’ என்ற கேள்வியுடன் மீண்டும் எழுச்சி பெற்று தற்போதைய ஆட்டங்களில் எல்லாம் சென்னை அணி வெற்றி வாகை சூடி வருகிறது. அதன் விளைவு, புள்ளிப் பட்டியலிலும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
MS Dhoni
MS DhoniPTI
அவ்வணியின் கேப்டன் ‘தல’ தோனிக்கு, இந்த ஐபிஎல் தொடரே கடைசியாக இருக்கும் எனப் பலராலும் கூறப்பட்டு வரும் நிலையில், 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை அணிக்குப் பெற்றுத் தர வேண்டும் என்கிற முனைப்பில் அவரும் கடுமையாகப் போராடி வருகிறார்.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனின் 33வது லீக் போட்டி, நேற்று (ஏப்ரல் 23) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. பின்னர், ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நேற்றைய போட்டியில் சென்னை அணி 5வது வெற்றியைப் பதிவு செய்ததுடன், சில சாதனைகளையும் படைத்தது.
நடப்பு சீசனில் அதிகபட்ச ரன்களைக் குவித்த சென்னை அணி!
இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த அணியாக சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக 235 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த சாதனை பட்டியலில் சென்னை அணி இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 2வது இடத்தில் உள்ளது. அது, கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொல்கத்தாவுக்கு எதிராக 228 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து இந்த பட்டியலில் 3வது இடத்திலேயும் சென்னை அணியே உள்ளது.
Csk
CskPTI
அவ்வணி, கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி பெங்களூருவுக்கு எதிராக 226 ரன்களை எடுத்திருந்தது. அதுபோல், இந்தப் பட்டியலில் 4வது இடத்திலேயும் சென்னை அணியே உள்ளது. கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி லக்னோவுக்கு எதிராக 217 ரன்கள் எடுத்திருந்தது. ஆக, இந்த சீசனில் மட்டும் சென்னை அணி 3 முறை 200க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடர்களில் 200+ மேற்பட்ட ரன்களை எடுத்த அணி!
மேலும், ஐபிஎல் தொடர்களில் (1 முதல் 16வது சீசன் வரை) 200+ மேற்பட்ட ரன்களை எடுத்ததிலும் சென்னை அணியே முதலிடத்தில் உள்ளது. அது, இதுவரை 26 முறை எடுத்துள்ளது. அதில் 20 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் பெங்களூரு அணி (24 முறை) 2வது இடத்திலும், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் (18 முறை) 3வது இடத்திலும் உள்ளன. அதுமட்டுமின்றி, ஐபிஎல்லில் அதிக ரன்கள் எடுத்த அணிகளில்கூட சென்னை அணி 3வது இடத்தில் உள்ளது.
Chennai Super kings Players
Chennai Super kings PlayersPTI
அது, கடந்த 2010ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக 246 ரன்கள் எடுத்துள்ளது. அதேநேரத்தில், இந்தப் பட்டியலில் பெங்களூரு அணி 263 மற்றும் 248 ரன்களுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி இதுவரை 235+ மேற்பட்ட ரன்களை 3 முறை எடுத்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக 246 ரன்களையும், 2008ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 240 ரன்களையும், நேற்றைய போட்டியில் 235 ரன்களையும் எடுத்துள்ளது.
கொல்கத்தா மைதானத்தில் அதிகபட்ச ரன்கள்!
கொல்கத்தா மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டி மூலம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 421 ரன்கள் (235 + 186) எடுக்கப்பட்டது. இதன்மூலம் அந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் சாதனை பட்டியலில், இந்த ரன்கள் 3வது இடம்பிடித்துள்ளது.
kolkata eden garden
kolkata eden gardenKolkataKnightRiders twitter page
இதற்குமுன்பு நடப்பு சீசனில் கொல்கத்தா அணியும் ஐதராபாத் அணியும் எடுத்த 433 ரன்களே (205 + 228) முதல் இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு கொல்கத்தா அணியும் மும்பை அணியும் எடுத்த 430 ரன்கள் சாதனை 2வது இடத்தில் உள்ளது.
அதிக சிக்ஸர் அடித்த பட்டியலிலும் சென்னை அணி சாதனை!
சென்னை அணி நேற்றைய போட்டியில் 18 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் மேலும், ஒரு சாதனை பட்டியலில் இணைந்தது. ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் சென்னை அணி, ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பெங்களூரு அணி முதல் இடத்தில் உள்ளது.
ருத்ராஜ் கெய்க்வாட்
ருத்ராஜ் கெய்க்வாட்Chennai IPL page
அது, கடந்த 2013ஆம் ஆண்டு, புனே அணிக்கு எதிராக 21 சிக்ஸர்களை விளாசியிருந்தது. அதைத் தொடர்ந்து 2வது இடத்தில் டெல்லி அணியும் பெங்களூரு அணியும் தலா 20 சிக்ஸர்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் முதல் 3 இடங்களிலும் பெங்களூரு அனி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டிருக்கும் சென்னை வீரர்!
சென்னை அணி வீரர் ரகானே நேற்றைய போட்டியில் , 29 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டிருக்கும் வீரராக ரகானே திகழ்கிறார்.
Ajinkya Rahane
Ajinkya Rahane Twitter
அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 199.04 உள்ளது. அவரைத் தொடர்ந்து 198.03 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2வது இடத்தில் கொல்கத்தா வீரர் ஷர்துல் தாகூர் உள்ளார். 3வது இடத்தில் பெங்களூரு அணி வீரர் மேக்ஸ்வெல் (188.80) உள்ளார்.
நடப்பு சீசனில் தொடர்ச்சியாய் 4 அரைசதம்
சென்னை அணியின் தொடக்க வீரர் டெவன் கான்வே நேற்றைய போட்டியில் 40 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், தொடர்ச்சியாக 4 அரைசதங்கள் அடித்த பட்டியலில் கான்வே இடம்பிடித்தார். இதற்கு முன்பு கடந்த காலங்களில் டேவிட் வார்னர் (2029), ஜாஸ் பட்லர் (2018), வீரேந்திர சேவாக் (2012) ஆகியோர் தொடர்ச்சியாக 5 அரைசதங்களை அடித்துள்ளனர்.
Devon Conway
Devon ConwaySwapan Mahapatra
விராட் கோலி (2016), ஷான் கிஷன் (2021-22), பிளிசிஸ் (2021), ஷிகார் தவான் (2020), கேன் வில்லியம்சன் (2016) ஆகியோர் தொடர்ச்சியாக 4 அரைசதங்களை அடித்துள்ளனர். அந்த வரிசையில் டெவன் கான்வே இந்த சீசனில் தொடர்ச்சியாக 4 அரைசதங்களை அடித்துள்ளார்.
20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஷிவம் துபே!
மேலும் நேற்றைய போட்டியின்போது வேறொரு சாதனையும் படைக்கப்பட்டது. குறைவான பந்துகளில் அதிவேகமாய் அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் சென்னை அணி வீரர் ஷிவம் துபேவும் இணைந்தார். அவர், நேற்றைய போட்டியில் 50 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த சென்னை வீரர்கள் பட்டியலில் 3வது இடம்பிடித்தார். இந்த பட்டியலில் ’சின்ன தல’ என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, கடந்த 2014ஆம் ஆண்டு பஞ்சாப்புக்கு எதிராக 16 பந்துகளில் அரைசதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
Shivam Dube
Shivam DubeSwapan Mahapatra
மொயின் அலி மற்றும் ரகானே ஆகியோர் தலா 19 பந்துகளில் 50 ரன்களை எடுத்து 2வது இடத்தில் உள்ளனர். மொயின் அலி கடந்த ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிராக எடுக்க, ரகானே நடப்பு சீசனில் மும்பைக்கு எதிராக எடுத்திருந்தார். இந்த பட்டியலில் தல தோனி, அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே ஆகியோர் 3வது இடத்தில் உள்ளனர். மும்பைக்கு எதிராக தோனி கடந்த 2012ஆம் ஆண்டும் அம்பத்தி ராயுடு 2021ஆம் ஆண்டும் 20 பந்துகளில் அரைசதத்தைக் கடந்துள்ளனர்.
Gefällt mir
Kommentieren
Teilen

ad

ad