புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2023

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில்  சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
 உயிரிழந்தவர் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேருக்கு யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற ஒருவருக்கு கொவிட் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொவிட் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அனைவரும் தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருந்தது. கொவிட்டின் திரிபு வைரஸால் இத்தகைய பாதிப்பு உருவாகியிருந்தது. அதேபோன்று தற்போதும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு வருகின்றது.

ad

ad