புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2023

உக்ரேனிய உணவுப் பொருட்களுக்கு மேலும் மூன்று நாடுகள் தடை!

www.pungudutivuswiss.com

உக்ரேனிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்த நாடுகளின் பட்டியலில் போலந்து, ஹங்கேரியுடன் ஸ்லோவாக்கியாவும் தற்போது இணைந்துள்ளது. உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உக்ரேனிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக போலந்தும் ஹங்கேரியும் சனிக்கிழமை அறிவித்தன. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால், உக்ரேனிய ஏற்றுமதிக்கான பாரம்பரிய கருங்கடல் வழிகள் தடைப்பட்டன.

உக்ரேனிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்த நாடுகளின் பட்டியலில் போலந்து, ஹங்கேரியுடன் ஸ்லோவாக்கியாவும் தற்போது இணைந்துள்ளது. உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உக்ரேனிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக போலந்தும் ஹங்கேரியும் சனிக்கிழமை அறிவித்தன. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால், உக்ரேனிய ஏற்றுமதிக்கான பாரம்பரிய கருங்கடல் வழிகள் தடைப்பட்டன

அதையடுத்து, உக்ரேனிய உணவுப் பொருட்கள் அதன் அயலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஊடாக ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் , விநியோக சிக்கல்கள் காரணமாக தானியங்கள் முதலான உணவுப் பொருட்கள் போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா முதலான நாடுகளில் தேங்கியதால் அந்நாடுகளில் மேற்படி உணவுப்பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இது உள்ளூர் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கும் போலந்து விவசாய அமைச்சரின் ராஜினாமாவுக்கும் வழிவகுத்தது.

அதையடுத்து உள்ர் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உக்ரேனிய தானியங்கள் மற்றும் அது போன்ற உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக போலந்து ஆளும் கட்சியின் தலைவர் ஜரோஸ்லாவ் காக்ஸின்ஸ்கி கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.

இந்நிலையில், உக்ரேனிய உணவுப் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கு ஸ்லோவாக்கியாவின் அரசாங்கம் நேற்று அங்கீகாரம் அளித்தது. நாளை முதல் இத்தடை அமுலுக்கு வருவதாக ஸ்லோவாக்கியாவின் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி சீனி, பழங்கள், மரக்கறிகள், வைன் மற்றும் தேன் ஆகியவற்றை இறக்குமதி செய்வத்றகும் ஸ்லோவாக்கியா தடை விதித்துள்ளது. போலந்து, ஹங்கேரியுடன் ஸ்லோவாக்கியா தடைகள் குறித்து உக்ரேன் கவலை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் உடன்பாடொன்றை ஏற்படுத்துவதற்காக உக்ரேனும் போலந்தும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad