புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2023

நல்லூரில் விடுதிக்குள் நுழைந்து அருண் சித்தார்த் வன்முறைக் கும்பல் தாக்குதல்!

www.pungudutivuswiss.com
[Friday 2023-04-21 07:00]

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் இராணுவ மற்றும் அரச ஆதரவுப் பின்னணி 
கொண்ட அருண் சித்தார்த் தலைமையிலான வன்முறைக் கும்பல், ஹோட்டல் 
ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , ஹோட்டல் உரிமையாளர் மீது சாணி தண்ணீர் ஊற்றி தாக்குதல் நடத்தியுள்ளது.


யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் இராணுவ மற்றும் அரச ஆதரவுப் பின்னணி கொண்ட அருண் சித்தார்த் தலைமையிலான வன்முறைக் கும்பல், ஹோட்டல் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , ஹோட்டல் உரிமையாளர் மீது சாணி தண்ணீர் ஊற்றி தாக்குதல் நடத்தியுள்ளது.


வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என முன்னர் பகிரங்கமாக ஒப்புக் கொண்ட அருண் சித்தார்த் தலைமையில் சென்ற பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றே தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நல்லூர் பகுதியில் உள்ள குறித்த ஹோட்டலுக்கு வியாழக்கிழமை இரவு அருண் சித்தார்த் எனும் நபரின் தலைமையில் 03 பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட வன்முறை கும்பல் கார் ஒன்றில் வந்து இறங்கி , ஹோட்டல் மீது தாக்குதல் மேற்கொண்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர் ஹோட்டலுக்குள் அத்துமீறி நுழைந்து ஹோட்டல் உரிமையாளர் மீது சாணி தண்ணீர் ஊற்றி தாக்குதல் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டு உள்ளதாகவும் , ஹோட்டல் கண்காணிப்பு கமரா கட்டுப்பாட்டு தொகுதியை உடைத்து தம்முடன் எடுத்து சென்றுள்ளதாகவும் ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

ad

ad