புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2023

சுவிட்சர்லாந்தில் 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு 6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்தில் 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு 6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகள் புதை படிமங்களாக, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

சுவிட்சர்லாந்தில் 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு 6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகள் புதை படிமங்களாக, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன

அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள 3 புதைபடிம ஆய்வு தளங்களில் இருந்து டைனோசரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டிரனாசோரஸ் ரெக்ஸ் என்ற வகையைச் சேர்ந்த அந்த டைனோசரின் சுமார் 300 எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

அவை அனைத்தும் மொத்தமாக ஒரே எலும்புக்கூடாக சேர்க்கப்பட்டு, தற்போது சுவிட்சர்லாந்தில் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இதற்கு 'டிரினிட்டி' என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதன் நீளம் 11.6 மீற்றர், உயரம் 3.9 மீற்றர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு தனியார் பழம்பொருள் சேகரிப்பாளர் 6.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இதனை ஏலத்தில் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad