புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2023

உலக பணக்கார நகரங்களின்பட்டியலில் நியூயோர்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.

www.pungudutivuswiss.com

உலக பணக்கார நகரங்களின் பட்டியலை குளோபல் வெல்த் டிராக்கர் ஹென்லி அண்ட் பார்ட்னர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு 3 லட்சத்து 40 ஆயிரம் மில்லினியர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலக பணக்கார நகரங்களின் பட்டியலை குளோபல் வெல்த் டிராக்கர் ஹென்லி அண்ட் பார்ட்னர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு 3 லட்சத்து 40 ஆயிரம் மில்லினியர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது

இந்தாண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளது. 2-வது இடத்தில் ஜப்பானின் டோக்கியோ நகரம் உள்ளது. இங்கு 2 லட்சத்து 90 ஆயிரத்து 300 மில்லினியர்கள் வசிக்கிறார்கள்.

3-வது இடம் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு கிடைத்துள்ளது. இங்கு 2 லட்சத்து 85 ஆயிரம் மில்லினியர்கள் வசிப்பதாக தெரியவந்துள்ளது.

இதன்போது உலக நாடுகளில் உள்ள மொத்தம் 97 நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆப்பிரிக்கா,அவுஸ்திரேலியா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளின் நகரங்கள் இடம் பிடித்து இருக்கின்றன.

அதிகபட்சமாக அமெரிக்காவைச் சேர்ந்த நியூயோர்க், லோஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, தி பே ஏரியா ஆகிய 4 நகரங்களும், அடுத்ததாக சீனாவின் பீஜிங், சாங்காய் ஆகிய நகரங்களும் இடம்பிடித்துள்ளன.

இந்த பணக்கார நகரங்களின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய 4 நகரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad