புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012





சிங்கள இனவாத அரசின் அடக்குமுறையினைக்கண்டித்தும் கைதான மாணவர்களை உடனடியாகவிடுதலை செய்யும்படி வலியுறுத்தியும்

யாழ்.பல்கலைக்கழகத்தைமுற்றுகையிட்டிருக்கும் படையினரை வெளியேறும்படிதெரிவித்தும் கனடாவில் உள்ள பல்வேறுபல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களும் ஏனைய இனமாணவர்களும் இணைந்து இன்று (04-11-2012)போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.
யோர்க் பல்கலைக்கழகம்றையர்சன் பல்கலைக்கழகம்,ரொறன்ரோ பல்கலைக்கழக சென்ஜோர்ஜ் வளாகம்,ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாகம்ஒட்டாவாகார்ல்டன் பல்கலைக்கழகம்வோட்டலூ பல்கலைக்கழகம்ஆகியவற்றில் இப்போராட்டங்கள் நடைபெற்றனதமிழ்மாணவர்களுடன் பெருந்தொகையான பிற இனமாணவர்களும் அவர்களின் மாணவர் அமைப்புகளும் இதிற்கலந்துகொண்டன.
யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில்கைதான நான்கு யாழ்பல்கலைக்கழக மாணவர்களைவிடுதலை செய்மாணவர் மீதான அனைத்துஅடக்குமுறைகளையும் நிறுத்துஉடனடியாக யாழ்.பல்கலைக்கழக சூழலிலுள்ள படையினரை மீளப்பெறுபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அங்கு திரண்டிருந்த மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்குபக்கபலமாக தாம் இருப்போம் என்ற செய்தியினையும்தெரிவித்திருந்தனர்.
ஸ்காபுரோவிலுள்ள ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோவளகத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் தமிழ்மாணவர்களுடன் வேறு பல அமைப்புகளைச் சார்ந்தமாணவர்களும் கலந்துகொண்டு யாழ்பல்கலைக்கழகமாணவர்களுக்கான தமது ஆதரவினைத் தெரிவித்தனர்.
இதில் ஸ்காபுரோ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும்கலந்துகொண்டிருந்ததுஇம்மாணவர் ஒன்றியம் 11,000மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டது என்பதுஇங்கு குறிப்பிடத்தக்கது.
இதன்போதும் யாழ்பல்கலைக்கழக மாணவர்களின்விடுதலைதமிழ் மாணவர் மீதான அடக்குமுறைக்குஎதிரான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.
அதேபோல்ரொறன்ரோ நகரின் மத்தியில் அமைந்துள்ளரொறன்ரோ பல்கலைக்கழக சென்ஜோர்ஜ் வளாக தமிழ்மாணவர் அமைப்பு அங்குள்ள மாணவர் ஒன்றியத்துடன்இணைந்து மதியம் 2 மணியளவில் ஓர் போராட்டத்தினைமுன்னெடுத்திருந்தது.

ad

ad