புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2019

களமிறங்கியது இந்திய புலனாய்வுப் பிரிவு

$இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்று இலங்கை வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவுடன் கொண்டிருந்த தொடர்பு குறித்த விபரங்களை அறியும் நோக்கில் இந்த குழு இலங்கை வந்துள்ளது.

ஒருவாரகாலம் இலங்கையில் தங்கவுள்ள அந்த குழு அதற்கு தேவையான விபரங்களை சேகரிக்கும் என்று குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாதிகளது ஆதரவாளர்கள் சிலர் கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துச்சென்றதாக கூறப்படுகிறது.

அவர்கள் தற்கொலைத் தாக்கதல்தாரிகளுடன் ஏதேனும் தொடர்புகளை பேணியுள்ளனரா? என்ற அடிப்படையில் இந்திய புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது

ad

ad