புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2019

ரவிகரன், சிவாஜியின் வழக்கு ஒத்திவைப்பு

வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பிர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டதுடன், இனி மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றத்துக்குச் சென்று கையெழுத்திடத் தேவையில்லை என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரச சொத்துகளைச் சேதம் விளைவித்தக் குற்றச்சாட்டில், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரனை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார், அவருக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணைகளையடுத்து து.ரவிகன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் பிணைகோரி, சட்டத்தரணி ஊடாக பிணையில் வெளிவந்தார்.

இருவரும், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றத்துக்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ad

ad