29 மே, 2019

யாழ் போதனா வைத்தியசாலையில் ஏழு வயது சிறுவன் மரணம் - உணவு ஒவ்வாமை காரணமா ?வயிற்றோட்டம் காரணமாக இரண்டு வாரங்களாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த 7 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாணவன் உட்கொண்ட உணவு ஒவ்வாமையால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மாணவனும் அவரது சகோதரர்கள் இருவரும் வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மாணவன் இன்று காலை உயிரிழந்தார் என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.

மாணவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள