புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 மே, 2019

அரசிமலை” பகுதியில் நில ஆக்கிரமிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேசச் செயலகப் பிரிவில் அடங்கும் புல்மோட்டை கிராம உத்தியோகத்தர் பிரிவினுள் “அரசிமலை” பகுதியின் நில ஆக்கிரமிப்பு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறிலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் மூலமாக அறிவித்தல் விடுத்துள்ளார்.

இந்தக் கடிதத்தின் பிரதிகளை வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, நில அளவையாளர் நாயகம், தொல்பொருள் ஆணையாளர், நில அளவை அத்தியட்சகர், திருகோணமலை மாவட்டச் செயலாளர் அரசாங்க அதிபர், திருகோணமலை பிரதேச செயலகம் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.