புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 மே, 2019

ஸ்ரீலங்கா இராணுவத்திடம் தொடர்ந்தும் பாலியல் கொத்தடிமை முகாம்கள்! ஊடகம் வெளிப்படுத்திய ஆதாரங்கள்

ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்ந்தும் பாலியல் கொத்தடிமை முகாம்களை நடாத்தி வருவதாக வவுனியா மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புதிய குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளனர்.

இந்த குற்றங்கள் உட்பட பாரதூரமான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்தினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கும், தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் முன்வர வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.