17 மே, 2019

சஹ்ரானின் இரு சகாக்கள் கைது!

தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசிமின் சகாக்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளவப்பட்ட தற்கொலைத் தாக்குல்களுடன் தொடர்புடைய சஹ்ரானுடைய நண்பர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரே இவ்வாறு ஹொரவப்பொத்தான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடி படையினர் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.