17 மே, 2019

ஷரியா பல்கலைக்கழகம் இலங்கைக்கு தேவையில்லை; அலரி மாளிகையில் வைத்து ரணில் அறிவிப்பு!

இலங்கைக்கு, ஷரியா பல்கலைக்கழகமொன்று தேவையில்லையென, பிரதமர் ரணில் அதிரடியாக அறிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பை அலரி மாளிகையில் வைத்து, இன்று (17) வெளியிட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

மத்ரஸாக்கள் உள்ளிட்ட இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டமூலம் தொடர்பில், தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது