19 டிச., 2019

இரா சம்பந்தனின்  உரையை எப்படியெல்லாம் திரிபு படுத்தி  பிழைப்புக்காக செய்தி  வெளி யிடுகிறார்கள்  சில இணையங்கள்  .  ஒரு  தமிழ் உரையைக்கூட  துண்டு துண்டாக பிரித்து இப்படியும்   செய்யலாம் என்ற  ஓர்  எடுத்துக்காட்டு .தமிழனை எப்படியெல்லாம்  ஏமாற்றுகிறார்கள் இவர்கள் இதனை அப்படியே  ஏராளமான  இணையங்கள்  அப்படியே  பிரதி பண்ணி  பதிவேற்றுகிறார்கள் .இதோ அவர்  ஆற்றும் உரையின்  .    (07.19  நிமிடத்தில்) .இருந்து  வருகின்ற உரை வடிவம் அரசாங்கம்  சர்வதேச ரீதியாக  சில வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது.பாரதப்பிரதமருக்கே  கொடுத்திருக்கிறது பாராட்றஹப்பிரதமர்  இந்த விடயம்  சம்பந்தமாக  தனது கருத்துக்களை  தெளிவாகக்  கூறியிருக்கிறார் இலங்கையில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட்து ஒரு நல்ல விடயமாக  இருக்கலாம் ஆனால்  தமிழ்  மக்களுடைய பிரச்சினை  அத்துடன் முடிவடையவில்லை தமிழ்  மக்கள் இலங்கைத்தீவில் இரண்டாம்தரப்  பிரசைகளாக கணிக்கப்படுகிறார்கள் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது  அவர்களுக்கு  சமத்துவ மான அடிப்படையில்  ஒரு  அரசியல் தீர்வு கொடுக்கப்படவேண்டியது அத்தியாவசியமமே ஜனாதிபதி  ராஜபக்சவும் அவருடைய வெளிவிவகார செயலாளர்  கீ எல் பீரிஸும் இந்திய அரசாங்கத்துக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்