புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 டிச., 2019

வேலணை பிரதேச சபை முன்னாள் ஈ பி டி பி தவிசாளர் போலின்(சிவராசா ) ஊழல் மோசடியை அம்பலப்படுத்திய தமிழரசு கடசி நாவலன் மீது தாக்குதல் வேலணை பிரதேச சபையில் இன்று குழப்பம் . தமிழரசு கட்சி தீவக தொகுதி கிளை செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் மீது ஈபிடிபியினர் தாக்குதல் முயற்சி . கடந்த காலங்களில் பிரதேச சபை தவிசாளராக செயற்பட்ட ஈபிடிபி சிவராசா ( போல் ) என்பவர் வாகன ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை
நிரூபிக்கப்பட்டுள்ளதால் அது குறித்து உடனடியாக நடவடிக்கையெடுக்கவேண்டுமென்று தமிழரசு கட்சி பிரதேச சபை உறுப்பினர் நாவலன் சபையில் உரையாற்றினார் . இந்நிலையில் ஈபிடிபி சார்பான பிரதேச சபை உறுப்பினர்களான சிவராசா என்பவரும் , மகிந்தன் என்பவரும் தகாத வார்த்தைகளால் சபையிலுள்ள தமிழரசு கட்சி உறுப்பினர்களை வசைபாடி பலத்த குரலில் சத்தமிட்டு சபை நடவடிக்கைகளுக்கு குழப்பம் விளைவித்தமையால் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு மேற்கொள்ள முற்பட்ட வேளையில் சிவராசா என்பவர் உறுப்பினர்களான நாவலன் மற்றும் பிரகலாதன் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார் . இதில் நாவலனது முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது . அவர் தற்போது சிவராசா என்பவருக்கு எதிராக ஊர்காவற்துறை பொலிசில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார் . மேற்படி சிவராசா என்பவர் தவிசாளராக கடமையாற்றிய 2011 - 2015 காலப்பகுதியில் பலதரப்பட்ட மோசடிகளில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டிருந்தமையால் ஈபிடிபி கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார் . 2017 ல் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். பின்னர் போனஸ் முறையில் பிரதேச சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட சிவராசா சிலநாட்களிலேயே ஈபிடிபியில் மீளவும் இணைந்துள்ளார் . தற்போது ஈபிடிபியின் வேலணை உதவி நிர்வாக செயலாளராக விளங்குகின்றார் . ஆனாலும் கட்சி தாவி இரு வருடங்களாகின்ற நிலையிலும் இவரை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு பொதுஜன பெரமுன கட்சியின் நிவாகத்தினர் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கவில்லை