சம்பிக்கவுக்கு தொடர்ந்தும் மறியல்
சம்பிக்க ரணவக்க நேற்று (18) இரவு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்படிருந்தார்.
இந்நிலையிலேயே இன்று அவரது பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு இடம்பெற்ற கார் விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.