வெள்ளி, அக்டோபர் 30, 2015

இந்தியாவில் 1 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது ஃபோக்ஸ்வேகன்
ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் 1 லட்சம் கார்களை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் இந்தியாவில் தயாரிக் கப்பட்ட 20,000 டீசல் கார்களும் அடங்கும்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தங்களது கார்களின் புகை அளவு வெளியேற்ற கருவியில் மோசடி செய்தது தொடர்பாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் இந்த கார்களை திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளது. நவம்பர் மாதம் 8 தேதிக்குள் இந்த நடவடிக்கை இருக்கும் எனவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இறக்குமதி செய்யப்பட்ட இன்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கள் உள்பட, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 ஆயிரம் டீசல் கார்களும் இந்த வகையில் திரும்ப பெற உள்ளது.

சர்வதேச அளவில் இந்த மோசடி புகார் எழுந்ததும், இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் கார்களில் ஆய்வு செய்ய, மத்திய அரசு செப்டம்பர் மாதம் இந்த அமைப்புக்கு கடிதம் எழுதியது. முக்கியமாக ஜெட்டா, பஸாட் செடான் வகை கார்களில் இந்த மோசடி கருவிகள் பொருத்த பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.