புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2025

www.pungudutivuswiss.com
செம்மணி குறித்த சர்வதேச விசாரணை கோரி 29ஆம் திகதி கையெழுத்துப் போராட்டம்!
[Tuesday 2025-08-26 07:00]

செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29 ஆம் திகதி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29 ஆம் திகதி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது

www.pungudutivuswiss.com
ஒருகட்சி ஆட்சிமுறையை ஏற்படுத்த என்பிபி அரசு முயற்சி!
[Tuesday 2025-08-26 07:00]

நாட்டில் நடைமுறையிலுள்ள பல கட்சி ஆட்சி முறைமையை ஒழித்து ஒரு கட்சி ஆட்சியை நிலைநிறுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் இந்த சர்வாதிகார போக்கினை தடுப்பதற்காகவே இன்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தமைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி கூறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

பிள்ளையானின் சகாக்கள் தொடர்ந்து கைது- கிரானில் சிக்கினார் சின்னத்தம்பி!
[Tuesday 2025-08-26 07:00]

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில்  பிள்ளையானின் சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்ற விசாரணைப் பிரிவு கைது செய்துள்ளது.

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் பிள்ளையானின் சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்ற விசாரணைப் பிரிவு கைது செய்துள்ளது.

ad

ad