
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டதில் திரண்ட தமிழர்கள்

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டதில் திரண்ட தமிழர்கள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறையூடான நீதியினையும் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி 15.09.2025 இன்று பி.ப 2:15 மணியளவில் ,சுவிஸ் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
| பொத்துவிலில் தொடங்கியது தியாகதீபம் திலீபன் நினைவு ஊர்தி பவனி! [Monday 2025-09-15 18:00] |
![]() தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவெழுச்சி மாதத்தின் முதலாம் நாளில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. இன்று பொத்துவிலிலிருந்து நல்லூரை நோக்கிய தியாக தீபம் திலீபன் அவர்களுடைய திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி மக்கள் வணக்கத்திற்காகப் எழுச்சிப் பயணத்தை ஆரம்பித்துள்ளது |
| தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நல்லூரில் ஆரம்பம்! [Monday 2025-09-15 18:00] |
![]() இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நல்லூரில் நடைபெற்றது. |