தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் - இன்றும் 12 அடையாளம்! [Sunday 2025-08-31 18:00] |
![]() செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (31) புதிதாக 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 10 மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன |
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று 39 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது. இதுவரையில் 209 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு 191 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
![]() |
-
31 ஆக., 2025
பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியேறியவர் சுட்டுக்கொலை! [Sunday 2025-08-31 18:00] |
![]() வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காலை 10.30 மணியளவில் வேவா வீதி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த ஒரு குழு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் அவர்கள் கூர்மையான ஆயுதங்களால் இருவரையும் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். |
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் காயங்களுடன் தப்பினார். புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்கள் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் நடந்து வரும் மேல் நீதிமன்ற வழக்கு தொடர்பாக கையெழுத்திட்ட பிறகு திரும்பி வந்துள்ளனர். இறந்தவருக்கு செப்டம்பர் 9 ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பு வரவிருந்தது. வென்னப்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் |