8 மே, 2014

ஆசிய நாட்டிலேயே மாசடைந்த காற்றை சுவாசிப்பவர்கள் அதிகம்; உலக சுகாதார நிறுவனம் 
உலக நாடுகள் பலவற்றின் நகரங்களில் மக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

 
ஆசிய நாடுகள் மிகவும் மோசம் என்று சொல்லும் அளவில் காற்று மாசடைந்துள்ளது. இது தொடர்பாக உலகிலுள்ள 91 நாடுகளைச் சேர்ந்த 1600  நகரங்களில் காற்றின் தரத்தை ஆராய்ந்து உலக சுகாதார நிறுவனம் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
இதில் அனுமதிக்கப்பட்ட அளவுகளைக் காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகமாக மாசடைந்த காற்றை பெருநகரங்களில் வாழும் மக்கள் 10 த்தில் 9 பேர் சுவாசிக்க வேண்டியுள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது.
 
இந்தியா பாகிஸ்தான் சீனவில் பல நகரங்களில் காற்று மாசுபடும் அளவு அபாயகரமான அளவுகளில் உள்ளது என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது