8 மே, 2014


கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விவகாரம் தொடர்பான மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த 15 கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்த தவறிவிட்டதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு
உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இன்று இந்த மனு மீதான இறுதித் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்ததோடு பெரும்பாலான பரிந்துரைகள் பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
மேலும், அணு உலையின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.