8 மே, 2014

யாழ். பேருந்து விபத்தில் முதியவர் சாவு 
சாவககச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து சைக்கிளொன்றுடன் மோதியதில் அதில் பயணித்தவர் படுகாயமடைந்ததுடன்குறித்த
நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
 
மேற்படி இவ்விபத்தில் 77 வயதான முதியவர் ஒருவரே  உயிரிழந்துள்ளதுடன் பிரேத  பரிசேதனைகளின் பின்னர் 
சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் யாழ். நீதவான் நீதிமன்றத்தில்
 இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.