புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2014

ஜார்க்கண்ட் முதல்வராகிறார் ரகுபர் தாஸ்

ராஞ்சி: ஜார்கண்ட்டின்  புதிய முதல்வராக  பழங்குடியினத்தைச் சாராத   ரகுபார் தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் பழங்குடி இனத்தவர்கள் என்பதால் பாபுலால் மராண்டி, அர்ஜுன் முண்டா, சிபு சோரன், மதுகோடா, ஹேமந்த் சோரன் என்று 5
முதல்வர்கள் பழங்குடி இனத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தற்போது அந்த இனத்தை அல்லாத ஒருவர் முதன்முறையாக ஜார்க்கண்ட் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

தலைநகர் ராஞ்சியில் இன்று நடந்த பாஜக எம்.எல்.ஏக்களின் கூட்டத்திற்குப்  பிறகு ரகுபார் தாஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
59 வயதாகும் ரகுபர் தாஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஆனந்த்பிகாரி துபேய்யை 70,157 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடையச் செய்துள்ளார்.

ad

ad