புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2014

மெல்போர்ன் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் குவித்துள்ளது.

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ‘பார்டர்- கவாஸ்கர்’ கோப்பைக்கான 4 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் 48 ரன் வித்தியாசத்திலும், பிரிஸ்பேனில் நடந்த 2-வது டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த போட்டியில் வெற்றி பெற தீவிர முனைப்புடன் இரு அணி வீரர்களும் வரிந்து கட்டிக்கொண்டு மோதினர்.  இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு  அவருக்குப் பதிலாக அறிமுக வீரர் கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டார். வருண் ஆரோனுக்கு பதிலாக முகம்மது சமி அணியில் சேர்க்கப்பட்டார். இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

அதன் படி  முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஜர்சும், வார்னரும் களம் இறங்கினார். டேவிட் வார்னர் ரன் எதுவும் இன்றி யாதவ்  பந்தில் ஆட்டம் இழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஜர்சும் வாட்சனும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 115 ரன்கள் சேர்த்திருந்த போது ரோஜர்ஸ் சமி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் வாட்சனும் அஷ்வின் பந்தில் 52 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்மித் நிலைத்து நின்று ஆட மறுபுறம் உள்ள வீரர்கள் சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.மார்ஷ் 32 ரன்கள், பர்ன்ஸ் 13 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் ஸ்மித் 72 ரன்களுடனும் , ஹேடின் 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில், சமி, உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், அஷ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

ad

ad