புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2014

ரேசன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசியை முழுமையாக வழங்க அமைச்சர் உத்தரவு


உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை தங்கசாலையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கை ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அவர்,  ‘’பொது விநியோகத் திட்ட கிடங்குகளிலும், இந்திய உணவுக் கழக கிடங்குகளிலும் தமிழகத்தின் மூன்று மாத தேவையான 9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கையிருப்பில் உள்ளது. இதில் 2 லட்சம் மெட்ரிக் டன் பச்சரிசி ஆகும்.

மாநிலம் முழுவதும் விலையில்லா அரிசி பெற தகுதியுள்ள 1 கோடியே 87 லட்சத்து 41 ஆயிரத்து 112 குடும்ப அட்டைதாரர்களுக்கும் 100 சதவீதம் அரிசி கிடைக்கும் வகையில் மாதந்தோறும் அரிசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாத இறுதியில் அங்காடியில் கட்டாயமாக இறுதி இருப்பு வைக்க வேண்டுமென்று அறிவுரைகள் ஏதும் வழங்கப்படவில்லை.

அட்டைதாரர்களுக்குரிய 20 கிலோ அரிசியை வழங்காமல், இறுதி இருப்பு பாரமரிக்க வேண்டியதில்லை என்று அங்காடி பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 20 கிலோ அரிசியை முழுமையாக வழங்க வேண்டும்’’என்று கூறியுள்ளார்.

ad

ad