புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2014

மைத்திரிபாலவை கைது செய்ய திட்டமிடும் ராஜபக்ஷவினர்
புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் வழங்கிய மில்லியன் கணக்கான வெளிநாட்டு பணத்தை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை கைதுசெய்ய ராஜபக்ஷவினர் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.
சிங்கப்பூரில் வைத்து புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளிடம் இருந்து பல மில்லியன் ரூபா பெறுமதியான டொலர், சுவிஸ் பிராங், யூரோ நாணயங்கள் மைத்திரிபாலவுக்கு கிடைத்துள்ளதாகவும் அவரது மகனது காதலியின் தந்தை தனது நண்பர் ஊடாக தரிந்து சந்திரவாச என்பவரிடம் இந்த பணத்தை கொடுத்து வைத்துள்ளதாகவும் கதை பின்னப்பட்டுள்ளது.
தரிந்து சந்திரவாச என்பவர் இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாகவும் ராஜபக்ஷவின் கதை புனைந்துள்ளனர்.
தரிந்து சந்திரவாச என்பவர் ராஜபக்ஷவினருக்கு நெருக்கமானவர். அவரிடம் ராஜபக்ஷவினரே வெளிநாட்டு பணத்தை கொடுத்துள்ளனர். எனினும் வெளிநாட்டு பணத்துடன் சந்திரவாச என்பவர் கைது செய்யப்பட்டதாக கூறி, மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு இந்த நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.
இந்த பொய்யான நடவடிக்கை தொடர்பில் விசாரணை நடத்த ராஜபக்ஷவினரின் ஆதரவாளரான புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் சமன் திஸாநாயக்க என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தரிந்து சந்திரவாச கடந்த 22 ஆம் திகதி இரவு 8.30 அளவில் இந்த பணத்தை கல்கிஸ்சை நீதவானிடம் ஒப்படைத்துள்ளார்.
ராஜபக்ஷவினருக்கு ஆதரவான நீதிபதிகள் குழுவின் முக்கியஸ்தரான ரங்கஜீவ விமலசேனவிடம் இந்த பணத்தை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், சந்திரவாச அதனை பதில் நீதவான் ஒருவர் முன் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து அனைவரும் இணைந்து பொய்யான வாக்குமூலம் ஒன்றை தயார் செய்துள்ளனர்.
மைத்திரிபால சிறிசேனவின் மகனது காதலியின் தந்தையுடைய நண்பர் மூலம் தனக்கு இந்த பணம் கிடைத்ததாக சந்திரவாச வாக்குமூலத்தில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு முன்னர் விமல் வீரவன்ஸவை பயன்படுத்தி பெரும் சேறுபூசும் பிரச்சாரம் ஒன்றை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவும் வெளிநாட்டு பணத்தை தம்வசம் வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad