சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களும், எதிர்வரும் ஆறுமாத காலத்துக்குள் நடத்துவதற்கான சாத்தியகூறுகள்
இருப்பதாக, தேர்தல்கள் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மூன்று மாகாண சபைகளுக்குமான பதவிக்காலம் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.
|
அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம், மாகாண சபையொன்று முன்னதாகக் கலைக்கப்பட்டாலே ஒழிய, அந்த மாகாண சபைக்கான கன்னியமர்வுக்காகக் குறிக்கப்பட்ட திகதி முதல், 5 வருடங்களுக்கு அந்த சபையின் பதவிக்காலம் இருக்கும். இதன் அடிப்படையிலேயே, இந்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நடத்தப்படவுள்ளன. தேர்தல்கள் செயலகம் அவ்வாறானதோர் ஏற்பாடுகளை முன்னெடுத்தாலும், மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைப்பதற்கே ஆராய்ந்து வருவதாக அறியமுடிகிறது.
|