புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2017

ஜெனிவா தீர்மானம் குறித்து ஆராய வட மாகாணசபையின் சிறப்பு அமர்வு

! ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரியும், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் எடுக்க வேண்டும் எனக் கோரியும் வடமாகாண சபையில் முன்வைக்கப்படவிருந்த பிரேரணை 14ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.நேற்று நடை பெற்ற வடமாகாண சபையின் 86ஆவது அமர்வில் மேற்படி பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிரேரிக்க இருந்தார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரியும், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் எடுக்க வேண்டும் எனக் கோரியும் வடமாகாண சபையில் முன்வைக்கப்படவிருந்த பிரேரணை 14ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.நேற்று நடை பெற்ற வடமாகாண சபையின் 86ஆவது அமர்வில் மேற்படி பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிரேரிக்க இருந்தார்.

எனினும் அமர்வுக்கு முன்னர் கூடிய ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழு எதிர்வரும் சனிக்கிழமை 11ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழு ஜெனீவா விவகாரங்கள் தொடர்பாக வவுனியா மாவட்டத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ள நிலையில் அந்த கலந்துரையாட லின் பின்னர் இந்த விடயத்தை கவனத்திற்கு எடுத்து கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க, இந்தப் பிரேரணை நேற்றைய அமர்வில் பிரேரிக்கப்படவில்லை. மேலும் இந்த பிரேரணை எதிர்வரும் 14ம் திகதி வட மாகாண சபையின் விசேட அமர்வு ஒன்றை கூட்டி அதில் ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

ad

ad