கூட்டு எதிரணி தலைவர் தினேஷ் குணவர்தன, ஒருவார கால சபை நடவடிக்கைகளில் பங்குபற்ற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பதில் தலைவராக செயற்படுவதற்கு, நாமல் ராஜபக்ஷ மற்றும் டலஸ் அழகப்பெரும விடுத்த கோரிக்கையை தொடர்ந்து, ஆளும் மற்றும் கூட்டு எதிரணியினருக்கிடையில் ஏற்பட்ட வாதபிரதிவாதங்கள் காரணமாக சபையில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதான நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கவேண்டும், தவிர்த்து எதிரணியினரின் கோரிக்கைகளை ஏற்று, சந்தர்ப்பம் வழங்கப்படுவதனால் பாராளுமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுவதாக ஆளும் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக, ஆளும் தரப்பு முதல் தடவையாக சபையை விட்டு வெளிநடப்பு செய்துள்ளது. இதனால் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பாராளுமன்ற, சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.