புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2017

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி, ஜெனிவா தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையையும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி வரவேற்றுள்ளார். அத்துடன், இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை ஊக்குவிக்க, 30/1 தீர்மானம் முழுமையாகவும் நேர காலத்துடனும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் அர்ப்பணிப்புடன் இருக்கிறது என்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்

ad

ad