9 நவ., 2018

நாடாளுமன்றைக் கூட்டியவுடன் பெரும்பான்மையை நிரூபியுங்கள்

இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ள அரசியல் நெருக்கடியைப் போக்க வேண்டுமாயின், நாடாளுமன்றத்தைக் கூட்டியவுடன்,
பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்துமாறு, ஐரோப்பிய ஒன்றியத்தினால், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளின் தூதுவர்கள் இணைந்து, ஐரோப்பிய ஒன்றியத்தினூடக, இலங்கைக்கு இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளனர்.