புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 நவ., 2018

குளம் உடைந்து காணாமல் போயிருந்தவர்களில் 6 பேர் உயிருடன் மீட்பு!

ளம் உடைந்ததில் காணாமல் போயிருந்தவர்களில் ஆறு பேரினை விமானப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். 


முல்லைத்தீவு, குமுலமுனை கிழக்கு பகுதியில் நித்தகேக்குளம் உடைந்ததில் குளத்திற்கு அருகில் இருந்தவர்கள் காணாமல் போயுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 

குளத்திற்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த தாய், தந்தை, குழந்தை மற்றும் குளத்திற்கு அருகில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த சிலருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 

அத்துடன் குளம் உடைந்ததில் அப்பகுதியில் உள்ள அனைத்து விவசாய நிலங்களும் அழிவடைந்துள்ளதாகவும் மேலும் மழை வீழ்ச்சி அதிகரித்தால் அந்ந ஊரே நீரில் மூழ்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும் நிலவும் சீரற்ற காலநிலையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.