9 நவ., 2018

நாட்டைக் கட்டுப்படுத்தும் பிரதான துறைகள், மைத்திரி + பாதுகாப்பு அமைச்சின் வசம்

இலங்கையின் அரசாங்க அச்சகமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று காலை காவற்துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் ஊடக அமைச்சும் அதன் கீழான நிறுவனங்களும் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்ட இருந்தது. இலங்கையின் அரசியல் யாப்பிற்க்கு அமைவாக பாதுகாப்புத்துறை மற்றும் முப்படைகளின் தளபதி ஜனாதிபதி என்பதும் அந்த நடைமுறையே 1978ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்தும் வருகிறது.

இந்த நிலையில் இவ்வாறான தொடர் நகர்வுகள் நாடாளுமன்றை கலைத்து இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கும் போது, நாட்டின் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் காவற்துறை, மக்களுடனான தொடர்பைப் கட்டப்படுத்தும் ஊடக அமைச்சும் அதன் கீழான நிறுவனங்களும், நாட்டின் தீர்மானங்களை சட்டபூர்வமாக்கும் வர்தமானியை அச்சிடும் அரசாங்க அச்சகம் என்பன ஜனாதிபதியின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் கீள் கொண்டு வரப்பட்டுள்ளதாக என்ற கேள்விகளை அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பி உள்ளனர்