புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 நவ., 2018

வடக்கு கிழக்கு ஆளுநர்களுக்கு மைத்திரியின் அதிரடி உத்தரவு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரால் விடுவிக்கக்கூடிய காணிகள் குறித்தான அறிக்கையை மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்குமாறு ஆளுநர்களிடம் ஜனாதிபதி பணித்துள்ளார்.

நான்காவது வடக்கு, கிழக்கு செயலணி கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில், கடந்த கூட்டத்தின்போது ஜனாதிபதி கோரிய காணி விடுவிப்பு தொடர்பான அறிக்கையை ஆளுநர்கள் கையளித்தனர். இதையடுத்தே ஜனாதிபதி மேற்கண்டவாறு ஆளுநர்களை பணித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், தற்போது காணி விடுவிக்கப்பட எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் நன்றி தெரிவித்தார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்களில் ஆயிரத்து 119 ஏக்கர் நிலம் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்கு தொடர்ந்தும் தேவைப்படும் அதே நேரம் 786 ஏக்கர் நிலம் விடுவிக்க கோரும பிரதேசத்தில் 216 ஏக்கரில் படுயினரின் முக்கிய கட்டிடஙகள் உள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

குறித்த கூட்டத்தில் கடந்த கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணம மாவட்டத்தில் இராணுவத்தினரின் வசமுள்ள நிலவிடுவிப்பு தொடர்பான முன்னேற்றம் தொடர்பில் ஆராயும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அதாவது யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போதும் 4 ஆயிரத்து 565 ஏக்கர் நிலம் படையினர் வசமுள்ளது. இதில் 3 ஆயிரத்து 200 ஏக்கர் நிலம் நிராணுவத்தினரின் பிடியில் உள்ளது. இவை தொடர்பில் ஆராயப்பட்டவேளை தம்மால் விடுவிக்கப்படவுள்ள பிரதேசத்தில் இடமாற்றப் பணிக்காக 210 மில்லியன் ரூபா பணம் வேண்டும். எனவும் கோரினர். குறித்த பணம் ஒதுக்கித் தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.

அத்துடன், படையினர் வசமுள்ள காணி மட்டுமன்றி, வனஇலகா, வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்றவற்றின் பிடியிலுள்ள காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். மேலும், காணிகளை விடுவிக்கும் பொருட்டு வேறு இடத்துக்கு முகாம்களை மாற்ற படையினர் பணம் கோருகின்றனர். ஆனால், படையினர் விவசாயம் செய்யும் காணிகளை விடுவிக்க பணம் தேவையில்லை. இதனால் விவசாயக் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

இதற்கு சாதகமாக பரிசீலிப்பதாக ஜனாதிபதி பதிலளித்தார். மேற்படி கூட்டத்தில் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்