புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 நவ., 2018

மட்டக்களப்பில் கடும் மழை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தில்
தாழ் நில பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக மாணவர்களில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்களின் வரவிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கல்குடா கல்வி வலய கல்விப்பணிப்பாளர் தினகரன் ரவி தெரிவித்தார்.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வந்தாறுமூலை மத்தியமாக வித்தியாலயம்,பலாச்சோலை வித்தியாலயம், கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலை,ஈரளக்குளம் ,ஊத்துச்சேனை,வடமுனை போன்ற பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள்,வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயம், விணாயக புரம்,கல்குடா போன்ற பாடசாலைகளில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சுங்காங்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கூரையின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததினால் பாடசாலை கூரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதே போன்று வாழைச்சேனை இந்துக்கல்லுரி வளாகத்தில் கால்வாய் உடைப்பெடுத்ததன் காரணமாக முன்பள்ளிகட்டிடத்தின் தூண் ஒன்று சேதமாகியுள்ளது. இதனால் பாடசாலை கட்டடம் உடைந்து விழும் அபாயத்தில் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதேபோன்று வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தட்டுமுனை, ஊரியன்கட்டு பாடசாலைகளில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்திலும் வாகரையில் ,ஊரியன் கட்டு வித்தியாலயம்,தட்டுமுனை பாடசாலை. வம்மிவட்டுவான் பாடசாலை,கண்டலடி அருந்ததி வித்தியாலயம்,கட்டுமுறிவு ஆகிய பாடசாலைகளில் வெள்ளத்தில் பாதிக்கப்ட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வருட இறுதியாண்டிற்கான பரீட்சைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி; நடைபெறவுள்ளது. 
தொடர்ந்து மழைபெய்யுமாயின் அதற்கான முன் கூட்டிய மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை வாழைச்சேனை கிண்ணையடி பிரதேசத்தில் பாடசாலைகளுக்கு அருகாமையில்  தேங்கி நின்ற வெள்ள நீரினை வெளியேற்றும் நடவடிக்கையில், கால்வாய் வெட்டும் பணியில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்.க.நல்லரெட்ணம் மற்றும் கு.குணசேகரன் ஆகியோர்கள் ஈடுபட்டனர்.