புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2022

பருத்தித்துறையில் பனை முனை கல்வெட்டு திறப்பு விழா

www.pungudutivuswiss.com


இலங்கையின் உச்சி என அழைக்கப்படும் ”பனை முனை கல்வெட்டு திறப்பு விழா” பருத்தித்துறை பனைமுனை பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.

இலங்கையின் உச்சி என அழைக்கப்படும் ”பனை முனை கல்வெட்டு திறப்பு விழா” பருத்தித்துறை பனைமுனை பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்துவைத்தார்.

இதுவரை காலமும் இலங்கையின் தலைப்பகுதியாக பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இலங்கையின் தேசிய கொடி பொறிக்கப்பட்ட கட்டுமானம் கருதப்பட்டது.

எனினும் அது உண்மையில் தெற்கே தெய்வேந்திரமுனையை நேரே இணைக்கும் முனை அல்ல எனவும், வரலாற்று ரீதியாகவும் பண்டைய வரைபடங்களில் குறிக்கப்பட்டுள்ளவாறும் உண்மையான இலங்கையின் தலைப்பகுதி(முனை) பருத்தித்துறை ஒரு பனை முனை அடையாள கல்வெட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முனை போர்காலத்தில் வரலாற்று குறிப்புகள், பண்டைய வரைபடங்கள் கணக்கில் எடுக்காமல் பாதுகாப்பு தரப்பால் அமைக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

   
   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

ad

ad