அமெரிக்க காலநிலை தொடர்பாக அதிரும் தகவல் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவு பெரும் குளிர் அமெரிக்காவை தாக்கியுள்ளது. நியூயோர்க் நகரில் 18 பேர் குளிரில் இறந்துள்ள நிலையில். வட அமெரிக்காவில் 50 பேர் காருக்குள் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனேகமான பகுதிகளில் -35 டிகிரி நிலவுகிறது.
ஆனால் வட அமெரிக்காவில் -50 டிகிரி குளிர் தாக்கியுள்ளது. இதனால் காரை வீதியில் ஓட்டிச் சென்ற பலர் காருக்குள்ளேயே இறந்து விட்டார்கள். இவர்களது கார் குளிர் காரணமாக நின்று விட்டது. இதனால் எஞ்ஜின் நின்றதால் பலர் குளிரில் உறைந்தே இறந்து விட்டார்கள். பொலிசாரோ இல்லை, தீ அணைக்கும் படையினரோ உதவிக்கு கூட வர முடியாத நிலை காணப்படுகிறது. காரணம் வீதிகளில் 6 அடிக்கு பனிப் பொழிவு உள்ளது.
அமெரிக்காவே தற்போது லாக் டவுன் நகரமாக காட்சி தருகிறது. பல பகுதிகள் குளிரை தாங்க முடியாமல் தத்தளித்து வருகிறது.