புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2022

வியட்நாமில் இருந்து 151 பேர் இலங்கைக்கு புறப்பட்டனர்! [Tuesday 2022-12-27 17:00]

www.pungudutivuswiss.com


கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303  இலங்கையை சேர்ந்தவர்களில் 151 பேர் இன்று வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையை சேர்ந்தவர்களில் 151 பேர் இன்று வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.


நவம்பர் 8ஆம் திகதி மியான் மாரில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு இலங்கையைச் சேர்ந்த 303 பேர் பயணித்த லேடி ஆர் 3 படகில் மியான் மாரில் இருந்து தென் கடற்பரப்பு வுங் டாவ் கடற்கரையில் இருந்து 258 கடல் மையில் கடலில் படகு கடலில் மூழும் நிலையில் அங்கிருந்த ஒருவர் தொலைபேசி ஊடாக இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டதையடுத்து கொழும்பிலுள்ள கடல் சார் ஒருங்கிணைப்பு அவசர முகவரம் வியட்நாம், சிங்கபூர், பிலிப்பையின்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை இலங்கை கடற்படை நாடிய நிலையில் அந்த கடற்பகுதியில் இருந்த ஜப்பானிய கொடியிடப்பட்ட ஹீலியோஸ் லீடர் கப்பல் அவர்களை காப்பாறி வியட்நாம் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களை 3 தடுப்பு முகாமில் தடுத்துவைத்திருந்த நிலையில் உலக மீள்குடியேற்ற ஸ்தாபனமான (ஜ.எம்.ஓ) அமைப்பு அனுசரணையுடம் மீண்டு நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்த 151 பேரை இன்று செவ்வாய்கிழமை வியட்நாம் நேரப்படி இன்று பிற்பகல் 5 மணிக்கு இலங்கைக்கு செல்லும் விமானத்தில் ஏற்றுவதற்காக முகாமில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் நாளை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவர்கள் என முகாமில் இருந்து வருவதற்காக காத்திருக்கும் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ad

ad