புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2022

உலக்கிண்ண இறுதிப்போட்டியை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை! ஆர்ஜெண்டினா அணிக்கெதிராக எழுந்துள்ள சர்ச்சை

www.pungudutivuswiss.com

உலக்கக்கிண்ண இறுதிப்போட்டியை மீள நடத்துமாறு 200,000 பேரின் கையெழுத்துடன் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

காத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியும் அர்ஜெண்டினா அணியும் மோதியிருந்ததுடன், பிரான்ஸ், ஆர்ஜெண்டினா இரண்டு அணிகளும் தலா 3 கோல் அடித்து பெனால்டியில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜண்டினா அணி வெற்றி பெற்றதில் சந்தேகம் உள்ளதாகவும், வெற்றிக்கோப்பையை திரும்பப்பெற வேண்டும் எனவும் பிரான்ஸ் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

உலக்கிண்ண இறுதிப்போட்டியை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை! ஆர்ஜெண்டினா அணிக்கெதிராக எழுந்துள்ள சர்ச்சை | Argentina Fifa World Cup Wins 2022

உலக்கிண்ண போட்டியை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை

ஆர்ஜண்டினா அணிக்கான மூன்றாவது கோலினை 108 ஆவது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸினால் அடிக்கப்படும் முன்பு மேலதிக வீரர்கள் இருவர் மைதானத்துக்குள் இருந்ததாக பிரான்ஸ் ஊடகங்கள் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

உலக்கிண்ண இறுதிப்போட்டியை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை! ஆர்ஜெண்டினா அணிக்கெதிராக எழுந்துள்ள சர்ச்சை | Argentina Fifa World Cup Wins 2022

குறிப்பாக 23 ஆவது நிமிடத்தில் ஆர்ஜண்டினா அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி தொடர்பாகவும், 108 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடிக்கும் போது மேலதிக வீரர்கள் களத்துக்குள் இருந்ததாகவும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

உலக்கிண்ண இறுதிப்போட்டியை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை! ஆர்ஜெண்டினா அணிக்கெதிராக எழுந்துள்ள சர்ச்சை | Argentina Fifa World Cup Wins 2022

கிண்ணத்தை திரும்ப பெறுமாறு கோரிக்கை

உதைப்பந்தாட்ட விதிகளின் படி, கோல் ஒன்று அடிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் போட்டிகள் ஆரம்பிக்கப்படும் போது மேலதிக வீரர் மைதானத்துக்குள் இருப்பதை நடுவர் சரிபார்க்கவேண்டும். அதுவரை அவர்கள் மைதான கோட்டுக்கு வெளியே காத்திருக்க வேண்டும்.இருப்பினும் லியோனல் மெஸ்ஸியினால் கோல் அடிக்கப்படுவதற்கு முன்னரே மேலதிக வீரர்கள் இருவர் மைதானத்துக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக்கிண்ண இறுதிப்போட்டியை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை! ஆர்ஜெண்டினா அணிக்கெதிராக எழுந்துள்ள சர்ச்சை | Argentina Fifa World Cup Wins 2022

இந்நிலையில், இறுதிப்போட்டியினை மீள நடத்துமாறு 200,000 பேரின் கையெழுத்து ஆதரவுடன் MesOpinions எனும் தளத்தில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஆஜெண்டினாவின் வெற்றியில் சந்தேகம் உள்ளதாகவும், வெற்றிக்கிண்ணத்தை திருப்பி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. 

ad

ad