-
14 நவ., 2013
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு மறைக்க முயற்சி ; சர்வதேச மன்னிப்பு சபை
பொது சமூகத்தில் காணப்படுகின்ற அச்சுறுத்தல்களை நீக்கி அதனை முடிவுக்கு கொண்டு வர பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.
பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் இன்று மாலை 4.20 அளவில் சிறப்பு விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தார்.
இளவரசர் சார்ள்ஸ் அவரது மனைவி கமிலா பாக்கர் ஆகியோருடன் 56 அரச பிரதிநிதிகளும் இலங்கை வந்துள்ளனர் என எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
1973 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சகல பொதுநலவாய நாடுகளின் மாநாடும் பிரித்தானிய மகா ராணி இரண்டாவது எலிச பெத் தலைமையிலேயே நடைபெற்றன. அவர் கலந்து கொள்ளாத முதல் மாநாடு கொழும்பில் நடைபெறும் மாநாடாகும்.
மூன்று நாள் அரச முறை பயணமாக இலங்கை வந்துள்ள இளவரசர் சார்ள்ஸ், பிரித்தானிய மகா ராணிக்கு பதிலாக பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தங்கியிருக்கும் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கண்டி, நுவரெலியா ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
அத்துடன் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளும் சில தலைவர்களை சந்திக்க உள்ள இளவரசர் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.
அதேவேளை கொழும்பில் உள்ள தேசிய அரும்பொருட் காட்சியகம், பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியவற்றும் இளவரசர் தம்பதி விஜயம் செய்ய உள்ளது.
நெடுந்தீவின் விவசாய, சூழற் பாதிப்புக்கள் குறித்து அமைச்சர் பொ.ஐங்கரநேசன் களஆய்வு
நெடுந்தீவின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் இவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் அறிந்து கொள்ளும் நோக்குடன் மேற்படி துறைகளுக்குப் பொறுப்பான வடக்கு மாகாண அமைச்சர் பொ.ஜங்கரநேசன் இன்று நெடுந்தீவில் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்துக்
காமன்வெல்த் மாநாட்டுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசியின் வீடியொ செய்தியாளர் குழு, அங்கு படம்பிடிப்பதில் சிக்கல்களைச் சந்தித்துள்ளது.
மாநாட்டு வைபவத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை படம்பிடிக்க அவர்கள் அருகில் செல்ல முயல, இலங்கை அதிகாரிகள் எமது செய்தியாளர் குழுவை தடுத்துள்ளார்கள்.
எங்கள் ஊடக சுதந்திரத்தில் ஏன் தலையிடுகின்றீர்கள் என்று எமது செய்தியாளரான ஜேம்ஸ் றொபின்ஸ் திரும்பத் திரும்பக் கேட்டும் இலங்கை அதிகாரிகள் அவர்களை தடுத்துள்ளார்கள்.
இது குறித்த காணொளியை நேயர்கள் இங்கு காணலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)